மரணத்தின் பிடியில் தாயின் தொப்புள் கொடி

தாயின் தொப்புள் கொடி
உறவிலிருந்து அறுந்து விழுந்தேன்
மரணத்தின் சாலையில்
வாழ்க்கையின் பயணத்தை தேடி.....

சாலையிலோ எத்தனை அழகான
கோலங்கள். கோலங்கள்
அனைத்தும் என் பயணத்தின்
காலங்கள். - இதில்
வசந்த காலமோ - இரு விழிகளும்
இமைக்கும் நிமிடம்.....


வசந்தம் முடிந்த வயோதிக உடலில்
ஜீவனாய் மரணத்தின் சாரல்
மரணத்தின் பயணமோ
மண்ணின் கருப்பையில் இருக்கும்
தொப்புள் கொடியை தேடி.......

மீண்டும் மனித இனம் - என்னை
அறுத்தெடுக்கும் வாய்ப்பை அளித்துவிடதே
பிண்டங்களின் சிதைவுகளாய் உன்னுள் நான் .......................... தாயே

எழுதியவர் : சிவகுமார் ஏ (3-Sep-12, 2:12 pm)
சேர்த்தது : சிவகுமார் ஏ
பார்வை : 208

மேலே