வசந்தகுமாரின் வெற்றிப்படிக்கட்டு 1
வாழ்க்கையின்
தள்ளாட்டத்தில்
தவறி விழும்போது…
தாயிருந்தால்
அன்பை ஊட்டி
அரவணைப்பாள்
தந்தையிருந்தால்
தாங்கி பிடிப்பார்
மனைவியிருந்தால்
தோல்வியை
மறக்கச் செய்வாள்
உடன் பிறந்தோர்
உடன் வருவார்
உறவினர்
உதவி செய்வார்
நண்பரோ
இடுக்கண் களைவார்
(காதலியிருந்தால்
என்ன செய்வாள்?
அத விட்டுவிட்டாயே)
நல்ல காதலியானால்
காயத்துக்கு
ஒத்தடம் கொடுப்பாள்
கள்ள காதலியானால்
காயம் பட்டதும்
காணாமல் போவாள்
அவரவர் சுமையை
அவரவர் சுமக்க
கடும் பாடு படும்
இந்த காலத்தில்
இவர்கள்தான்
என்ன செய்வார்கள்?
அவநம்பிக்கையில்
அழுதுகொண்டிருப்பதை விட
தன்னம்பிக்கை கொண்டால்
தலை நிமிர்ந்தே
தரணியில் வாழலாம்
தன்னம்பிக்கை ஊட்டும்
புத்தகங்கள் படித்தால்
புத்துணர்வு வரும்
புத்துணர்வு ஊட்டும்
புத்தகங்கள் நிறைய
அதில் ஒன்றுதான்
வசந்தகுமாரின்
வெற்றிப்படிக்கட்டு
வசந்த் தொலைகாட்சியில்
அன்றாடும் அவர்
அழகு பட உரைக்கும்
தன்னம்பிக்கை சொற்பொழிவின்
தனித் திரட்டு....
(தொடரும்)