முன்னேற நினைத்தால்

வாழ்க்கைப் பாதையிலே
ஆயிரம் முள்ளிருக்கும்
வளைந்து நீக்கிவிட்டால்
வையகம் உன் கையில்... ...

முள் நீக்கா பாதையிலே
முன்னேற நீ நினைத்தால்
குருதி துடைக்கத்தான்
குனிய வேண்டி வரும் ... ...

முன்னேற நினைத்தால்
வளைந்து கொடு - முதுகில்
குத்த நினைத்தால்
நிமிர்ந்து விடு ... ...

வளைதல் வாழ்வின்
முன்னேற்றத்திற்கு
நிமிர்தல் வாழ்வின்
காப்பிற்கு... ...


#சொ.சாந்தி

எழுதியவர் : சோ (6-Sep-12, 9:37 pm)
பார்வை : 229

மேலே