அவள் அழகின் பொருட்டு ...
ஒட்டுமொத்த கூட்டத்தையும்
தான்,தீர்கமாக கற்றிருந்த
வித்தையினால்
கற்றுத்தந்த எசமானனின்
அன்பினது ஆழம் பொருட்டு
வித்தைக்காட்டும்
குட்டிக்குரங்காய் ...
ஒட்டுமொத்த என் திறனை
கொட்டி வைக்கின்றேன்
வார்த்தைகளில்
"அல்லாவே " என
ஆச்சரியத்தில் வாய்திறக்கும்
அவள் அழகின் பொருட்டு ...