நெடுந்தொடகள் ( சீரியல்கள் )
இரும்பின் நுனிக்கொண்டு - நரம்புகளை
பொத்தல் செய்திடாமல்
உடலுறுப்புகளில் ஒன்றில்கூட
சிறு அறுப்பும் கொண்டிடாமல்
வகைவகை (மாத்திரை )வில்லைகள் விழுங்கிடும்
தொல்லைகள் ஏதும் அண்டிடாமல்
பக்கவிளைவுகள் ஏதுமில்லா சித்த வைத்தியம்
போலேதும் இல்லாது
நம் கலாச்சாரத்திற்க்கு சீர்கெடுக்கும் பக்கா விளைவாய்
வீடுதேடி சீர்தூக்கிவரும், பித்தப்பைத்தியமாய்
கோபம், குரோதம் ,பகை, பொறாமை , துரோகம்
தகாவுறவென பற்பல
கலாசார சீர்கேட்டை ,பேதைகளுக்கு போதைகளை
வீட்டிற்க்கே வந்து , விழி வழியே
மருந்தாய் தர துவங்கி , பின் விருந்தாய் விளங்கிடும்
கொடும் போதையின் பிரதிநிதிகளாய் ..
விரட்டியே,பின் தொடர்ந்திடும் பயங்கரம் ...
நெடுந்தொடகள் ( சீரியல்கள் )