பரிணாமம்
உயிர்கள் பரிணமித்து
உயர்த்திக் காட்டியது - மனிதனை,
சிந்தனைகள்பரிணமித்து
துப்பி உமிழ்ந்தது - ஆயுதங்களை,
உணர்வுகள் பரிணமித்து
கடித்துக் குதறியது - மனிதத்தை,
மதங்கள் பரிணமித்து
மறக்கச்செய்தது - தர்மங்களை,
மனிதன் பரிணமித்தான்
இயற்கையை சீர்குலைத்தான்,
இயற்கை பரிணமித்தது
அழிவுகளை அள்ளி வீசியது,
பரிணாம வெள்ளத்திலே
பலியானது நல் உள்ளங்களே.....