இறைவனுக்கு கேட்டிடுமா இந்த அனாதையின் குமுறல்

பிறந்தேன் வளர்ந்தேன்

அன்பு காட்டி பாலூட்ட
அன்னை இல்லை

அறிவு சொல்லி வழி நடத்த
தந்தை இல்லை

பேரு வைத்து கொஞ்சிட
தாத்தா இல்லை

கதை சொல்லி தூங்க வைக்க
பாட்டி இல்லை

கிடைத்ததை உண்டு வாழும் எனக்கு
சமுதாயம் வைத்த பெயர்
அநாதை

வரம் கேட்டா நான் பிறந்தேன்
ஏ பிரம்மா
உனக்கு பொழுது போகவில்லை என்றால்
என்னை போல் பிள்ளைகளை படைத்து
அநாதை என்று பெயரிட்டு மகிழ்வாயா?

பள்ளி செல்லும் ஆசை உண்டு
மற்ற பிள்ளைகளோடு
நட்பு பாராட்ட விருப்பம் உண்டு

ஆசை மட்டும் போதுமா
படைத்தவன் விதியில் எழுத வேண்டாமா
நானும் தாயோடு வாழ்ந்திட

ரோட்டில் நடக்கையிலே
சேலை கட்டி செல்லும் பெண்ணெல்லாம்
தெரிகிறது எனக்கு தாயாக

இருக்கலாம்
நிச்சயம் இதில் ஒருத்தி என் தாயாக
அவளும் அறியப் போவதில்லை
எனக்கும் தெரியப் போவதில்லை
அவள் தான் என் தாய் என்று

எல்லோரையும் போல அவளும் சொல்லுவாள்
யார் பெற்ற பிள்ளையோ
அனாதையா நிக்குதுன்னு !!!

பிறந்ததை தவிர
நான் செய்த தவறென்ன
வாழ்கிறேன் பசியோடு
போராடுகிறேன் வாழ்க்கையோடு

யாரோ செய்த தவறுக்காக
தனியாக இன்று போராடுகிறேன்
கடலை விட பெரிதான இந்த உலகத்தில்
அரை சான் வயத்த நிரப்பிட

எழுதியவர் : Meenakshikannan (11-Sep-12, 2:25 pm)
பார்வை : 293

மேலே