என் தேவதைக்கு பிறந்தநாள்............

கண்டதில்லையுன் கண்களை,
அது மானோ மீனோ
ஏதும் புரிந்துகொண்டதில்லை.

ஆனாலும் உன் கண்ணுக்குள்
நீ கொண்டிருக்கும் ஒளியினை
உணர்ந்துகொண்டேயிருக்கிறேன்.

குவிந்து கிடக்கும் உன்
செவ்விதழ்கள் சிரிக்க
மட்டுமே செய்யட்டும்
உன் மூச்சு நிற்கும்வர

மருவிமருவி கனைத்ததுண்டு,
மனம் விட்டு அழுததுமுண்டு,
உன் சிறுகதையின் முடிவுகண்டு.

உள்ளத்தில் ஊசியினை
தைத்துவிட்டேன் ஆனாலும் நட்புகட்டிக் கலந்திருப்பேன் காலமுள்ளவரை.
நட்புமழை என்றுமுண்டு காண்.

கனவிலும் கேடுவேண்டாம்,
கண்களிலும் கவலைவேண்டாம்,
கனிந்து வரட்டும் இன்பவாழ்வு,

தேன்குழைத்த வான்மழைபோல்,
உறவுசொல்லும் வீசு தென்றல்போல்,
கற்பம் விட்டுவந்த புதிய சிசுபோல்,

சித்திரத்தின் இளமைபோல்,
சிரிப்பில் சிதைக்கும் பதுமைபோல்,
சிலையாய் மாறும் கல்லைப்போல்,

துன்பம் இனி காணவேண்டாம்,
இந்த உன் இனியனாளாம்
துவங்கட்டும் நன்மை இப்பிறந்தநாளில்.

எழுதியவர் : கவிதை தேவதை. (13-Sep-12, 10:41 am)
பார்வை : 575

மேலே