பள்ளி தோழியின் வாழ்க்கை தோல்வி......

உதயராணி…
அழகப்பா பள்ளியின்
கல்வி ராணி…
போய் விட்டாயே மகராசி..

சிரிப்பில் இளவரசி
படிப்பில் பேரரசி
அழகில் மகாராணி
உன் புன்னகை
இன்னும் கண்ணில் நிற்குதமமா..
கோபத்திலும்....
அழுகையிலும்...
கூட
ஒரு நளினம்
காட்டியது நீ தானம்மா..


கல்வியில் முதலிடம்
இருக்கையில் முதலிடம்
மதிப்பெண்களில் முதலிடம்
அறிவினில் முதலிடம்
பழகுவதில் முதலிடம்
நட்பில் முதலிடம்
எளிமையில் முதலிடம்
கடைசியில்
மரணத்திலுமா முதலிடம்…

அழகப்பா பள்ளிக்கு
பெருமை சேர்த்தவளே..
உன்னை
சிறுமை படுத்தி
சிதைத்தது யார்…?
பக்குவபட்ட வாழ்க்கையில்
ஒரு பக்குவ்மில்லா
முடிவு…

சொர்க்கத்தில்
இனி
எவரும்
அறிவாளி என
சொல்ல முடியாமல்
போகுக..

எங்கள் பள்ளியின் அறிவொளி
அங்கு
பெருஒளியாய்
சுடரட்டும்…
உன் ஆத்மா சாந்தி அடைய
தாமதமாய்
எங்கள் கண்ணீர் துளிகள்

மஹாதேவன்…

எழுதியவர் : மஹாதேவன், காரைக்குடி. (13-Sep-12, 4:11 pm)
பார்வை : 421

மேலே