எங்கே எனது தேவி!!
எங்கே எனது தேவி உயிரிலே
கலந்து உறைந்த பேதை(2 )
காதல் மறந்துவிட்டதோ இல்லை என்
கனவு கலைந்து விட்டதோ....
மனதை திரும்ப தருவாய் இல்லை என்
உயிரின் ஓலம் அறிவாய்....
காதல் வேள்விகளில் கன்னி பார்வைகளில்
மறைந்த உயிரின் நெஞ்சம் நோகுதே
கண்ணில் நீரொழுகும் கன்ன ரேகைகளில்
விரல்கள் படர்ந்து விழி வேகுதே
வேகம் கூடுகின்ற கடலின் அலைகளில்
மோதி மோதி உயிர் போகுதே
காற்றும் தீண்டுகையில் உந்தன் விரல்தனை
தேடி தேடி மனம் வாடுதே...
கவிதையே உன் நிழல் என் நிழல் சேர்ந்தால்
உயிருடன் நானிருப்பேன்
கருவிழி கொண்டு எனைநீயும் பாரு
நூறு தரம் உயிர் துறப்பேன்...
எங்கே எனது தேவி உயிரிலே
கலந்து உறைந்த பேதை(2 )
நெடு பயணம்தனில் மிதந்த பாதம்
நடைமறந்து போக
சிறுதூரம் நீளுதே
ரத்த நாளங்களில் பச்சை
நறும்புகளில் பூவை
உந்தன் முகம் தோன்றுதே
பாவை கோதி விடும் கூந்தல் இருளில்
உயிர் தொலைந்து தொலைந்து வழி தேடுதே
அமுதம் சொரிந்திருக்கும் இதழில் ஒன்றிரண்டு
முத்தம் சிந்த கன்னம் வேண்டுதே
வேண்டுதே...
சோலையில் பூத்தது பூவனம் என்று
காதலை எண்ணியிருந்தேன்
பாதையின் வழியில் நெறிஞ்சு முள்ளாய்
நீ நெஞ்சில் காதலை தைத்துவிட்டாய்..
எங்கே எனது தேவி உயிரிலே
கலந்து உறைந்த பேதை(2 )