கலாமின் கனவு !

வெயில் கொளுத்த கொளுத்த
கை வெளுக்க வெளுக்க
துணி துவைக்க துவைக்க
உடல் நனைக்க நனைக்க
சலவை முடிக்க முடிக்க
சமயம் நெருங்க நெருங்க
கூலி கிடைக்க கிடைக்க
பிறகு
குவார்ட்டர் அழைக்க அழைக்க
அவன் குடும்ப மானம் கப்பல் ஏற ஏற
வீதியில் வீழ்ந்தான் !
திருந்தா ஒரு இந்திய குடிமகன் !
இந்நிலை தொடர்ந்தால்
'கலாமின் கனவு' நிறைவேறும் ..... எப்படி?