குழந்தை தொழிலாளிகளை நிறுத்தவும்

பூவின் கையில் பூக்களா?
பூவின் வாடிய முகத்தை பார்த்து
பூக்களும் வாடுகிறதோ?

பூக்களை தலையில் சூடி
அழகு பார்க்க அன்னை இல்லையோ?
அதனால் தான் வந்ததோ
இந்த தொல்லையோ?

பூவே உன் கண்களில் தான்
எத்தனை ஏக்கம்?
நீ கேட்கும் முன் நான் கேட்டு விடுகிறேன்
என்று முந்துகிறதோ ரோஜா மொட்டு?

பூவே!
உன்னை படைத்த கடவுளை தண்டிப்பதா?
உன்னை பெற்ற பெற்றோரை தண்டிப்பதா?
நீ பிறந்த இந்நாட்டினை தண்டிப்பதா?
ஒன்றும் அறியா நிலையில் நான்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : (16-Sep-12, 5:14 pm)
சேர்த்தது : Anthony Muthu
பார்வை : 185

மேலே