அறிவொளி

கை விளக்கு பாதை தெரியும்
அறிவு விளக்கு வாழ்க்கை தெரியும்

பார்வையற்றோருக்கு கண்ணொளி இல்லை
படிப்பறிவற்றோருக்கு அறிவொளி இல்லை

பதார்த்தம் என்பது உணவின் திண்மை
எதார்த்தம் என்பது வாழ்க்கையின் உண்மை

வாழ்க்கை என்பது ஓடலின் தத்துவம்
அறிவொளி என்பது கல்வியின் மகத்துவம்

கப்பலில் வருபவனுக்கு கலங்கரை விளக்கம்
காலத்தே உருள்பவனுக்கு அறிவொளியே வெளிச்சம்

உரசலில் பிறப்பது ஒளி
கேள்வியில் பிறப்பது அறிவொளி

எழுதியவர் : சுகந்த் (23-Sep-12, 12:09 am)
சேர்த்தது : சுகந்த்
பார்வை : 159

மேலே