சுகம் சுமையாகுமா ?

பெற்றோருக்கோ பிள்ளைகள்
சுகம்
சுகம் சுமையாகாது!

பிள்ளைகளுக்கோ பெற்றோர்கள்
கடன்
கடன் சுமையானது !

கடன்களுக்கு வட்டியோ
பேரப்பிள்ளைகள்

வட்டியை கடன்களின்
கண்ணில் காட்டவும் மறுக்கின்றனர்

கடனை அடைக்கத் தெரியவில்லை
கடன் தள்ளுபடியும் இல்லை .

கடன் சுமை தாங்காமல்
இறக்கி விடுகின்றனர்
முதியோரில்லங்களில்

சுகத்திற்கு கடன் சுமையாகும் போது
வட்டிக்கு சுகம் என்ன வாகும்?

எழுதியவர் : ஏகலைவன் (23-Sep-12, 12:38 am)
சேர்த்தது : ஏகலைவன்
பார்வை : 154

மேலே