காதல் மந்திர புன்னகை
புன்னகையின் வசீகரம்
அன்றுதான் அறிந்தேன் உன்
ஒரு நிமிட முதல் புன்னகையில்....
உன் ஒரு நிமிட புன்னகையால்
என் இதய வீதியில் சாரல் மழை
குடைபிடிக்க மணமில்லை உன்
இதயத்தில் இடம்பிடிக்க நினைத்து
அடம்பிடித்து நனைந்தது இதயம்....
உன் புன்னகை வெட்கத்தில்
சற்று மறைந்தே நாணம்
கொண்டது என் நரம்பு நாளங்கள்....
உன் புன்னகை உதடுகள் அசைய
அசைவற்று கரைந்து போனது
என் கண்களின் காட்சிகள் யாவும்....
உன் புன்னகை சத்ததால்
என் ரத்த ஓட்டத்தில்
யுத்த உச்ச கட்டம்-காதல்
மோட்சம் பெற்று ஏற்றது
முதல் காதல் நிமிடத்தை இதயம்....
உன் புன்னகையின்
அர்த்தங்கள் புரியாமல்
என் காதோரம் மறைந்து
உரைத்தது மனது
காதல் கருவொன்று
உருவாகிறதென்று....
உருக்கமான உன் புன்னகை
இறுக்கமான நிமிடங்கள்
நெருப்பாய் உருகி
உருவம் பெற்று நீயாக நின்றாள்
அன்று வரை கனவில்
மட்டுமே வந்து போகும்
என் காதல் தேவதை....
ஒருதுளி புன்னகைதான்
இருந்தும் சிந்தாமல் சிதறாமல்
சிறை பிடித்து வைத்தேன்
என் மன சிறையில்
சிறைபட்டது உன் புன்னகையால்
நானென்று தெரியாமல்....
உன் மந்திர புன்னகையால்
தந்திரமாய் எனை சிறைபிடித்த
அந்த ஒரு நிமிட முதல் புன்னகையின்
நிமிடங்களே என்னை பாடாய் படுத்த
அதற்குள் மறு புன்னகையா.?.
தாங்காது இதயம் இனியும்
தயங்காது என் காதலை சொல்ல
மறுக்காமல் ஏற்றுகொள்
மறக்காமல் மயங்கி கிடப்பேன்
உன் காதல் மந்திர புன்னகையில்....