***எங்கே தேடுவோம் நல்மாதுவை?.......***சி.பொற்கொடி

விபூதி பூசாமல் வீதியில்
நடந்து வருவதில்லை முன்பு...
இன்று பெண்கள் நீங்கள்
பவனி வருவதை கண்டு ரசிக்க....
பற்பல வாசனை திரவியம்
பூசி வருகிறோமே உங்களைப்போலே.....!
பெண் கவர்ச்சி மனதினை
சாகடிக்கும் பூச்சிக்கொல்லி என்பதை
அறியாத அசடாய் சாலையில் குவிகிறோம்.....!

புழுதி பறக்க பொட்டல்களில்
கபாடி விளையாடுவோமே முன்பெல்லாம்...
இன்று தூசி பட்டாலே
ஆடை மாற்றி அற்புதமாகிறோம்......!
காசி சென்றாலும் கரையாத
பாவம் பெண் மோகம் என்பதை
உணராது ஊத்தை சடலமாய்
ஊரைச் சுற்றி வருகிறோம்.......!

பேசி மகிழும் போதெல்லாம் நாம்
தெரியதிருப்போம் இது காதலா காமமா என?...
தாசி என்று கண்ட பின்னும்
நமக்கு மட்டுமே என்றும் கட்டளை இடுகிறோம்...
பெண் காமம் தடுக்க இயலா
காட்டு வெள்ளம் என புரியாமல்....
அன்பை வைத்து அணையை தடுக்க நினைக்கின்றோம்....!
இயலாது இறுதியில் உயிரிலப்பே நேர்கிறது.....!
அசதி என்று வந்தால் அன்னையின் மடியில்
உறங்கி சோர்வை தீர்ப்போம் அன்று....!
பெண்ணுடன் சொகுசு வாழ்க்கை வாழ முற்பட்டு
நமது அன்னைகளை மறந்துவிடுகிறோம் இன்று...!

ஆசைகளை தாகம் தீர பருகிவிட்டு
காதில் பூசொருகி செல்லும் காட்டு வெள்ளத்தில்
கரை புரண்டிடாத மானிடர்தான் இங்கேது...!
தரணியில் உள்ள மனம் எல்லாம்
பழுதாகி கிடக்க இவ்வுலகில்...
எங்கே தேடுவோம் நல்மாதுவை...!
மாதுவை தேடி மதுவை நாடிய
கதைகள்தான் நாட்டில் அதிகம்போல........!

எழுதியவர் : சி.பொற்கொடி (அரியூர் பட்டி (28-Sep-12, 9:06 am)
சேர்த்தது : porkodi
பார்வை : 162

மேலே