தோல்வி என்பது முகமூடியல்ல
தோல்வி என்பது முகமூடியல்ல
நானும்
தோல்வியை
பார்த்தவன் தான்..
என்னை
தோள் கொடுத்து
தூக்க
நான்
எவரையும் நம்பவில்லை
எவரிடமும் எதையும் எதிர்பார்க்கவில்லை
என்னை
சமூகத்தில்
தூக்கி நிறுத்தியது
நாணயமும்,
சொன்ன வாக்குகளும்,
இவை
இருந்தால்
எவரையும்
நம்ப வேண்டியதில்லை
திட்டமிடாத
வாழ்க்கை
சவபெட்டிக்கு சமம்.
நாணயத்தை
காப்பாற்றாத வாழ்க்கை
அம்மணமாய்
நடுவீதியில்
ஓடுவதற்கு
சமம்.
எதுவேன
தீர்மானிப்பது
நம் மனசாட்சி தான்
நம் வரவுக்கு மீறிய
வாழ்க்கையை தேடும்
மனபிசாசும் தான்
நீ
எதனை
நம்புகிறாயோ
அதுவே
உன்
வாழ்க்கை…..
மஹாதேவன்…