கல்வி தந்தை
அரிதாரம் பூசி
ஆடுகின்ற நடிகனுக்கு
ஆயிரம் ரசிகர் மன்றம்
இங்கே
அகிம்சையில் வாழ்ந்த
அண்ணல் காந்திக்கு
அதில் ஓன்று உண்டா ?
அனைவரும் படிக்க
ஆயிரம் பள்ளிகள்
கர்மவீரர் காமராஜர்
கட்டினார்
கல்வித்தந்தை என
அவரை கரகோஷம்
செய்யவில்லை
இன்று
ஐந்தாறு கல்லூரி
அத்தனையும்
பணகொள்ளை
அவருக்கு
நாம் வைத்த பெயர்
கல்வித்தந்தை