மகனின் கனவு

காலை எனது பெயரை உச்சரிக்கும் எனது தெய்வமே !!
எனக்கு தெரியும் உனது பிறப்பு எனக்காக தான்
என்று !

உனது சிரிப்பு,அழுகை,சந்தோசம்,துக்கம் என்னும் ஒன்பது நவரசங்களும் என்னுடன் தான் கலந்தது
என்று !

ஆம் தாயே

உறவுகளின் உன்னதம் !
பிரிவுகளின் துயரம் !
அறிவினை கொடுக்கும் ஆரோக்கியம் !
சிந்தனையை தூண்டும் உன் சிரிப்பு !
கவலையை மறைக்கும் உனது முகம் !
எனது வலியை தங்க முடியாத உனது கண்ணீர் !
எனது ஆசையை நிறைவேற்றும் உனது விருப்பம் !

உனக்கு ஒரு அன்னையர் தினம் கொண்டாடினால் போதுமா !
எனது வாழ்கை உனக்கு சமர்ப்பணம்
உனது விருப்பம் எனது வாழ்கை

தாயே உனக்காக நான் இருப்பேன்!
உன் உயிருடன் கலந்து இருப்பேன் !
உன் உயிர் பிரியும்வரை உன்னுடன் இருப்பேன் !
என் உயிர் இருக்கும்வரை உன்னை நினைத்திருப்பேன் !!!

இப்படிக்கு

உன் மகன்

எழுதியவர் : இயற்கை விரும்பி (29-Sep-12, 6:59 pm)
சேர்த்தது : dineshkumarbhakthavachalam
Tanglish : maganin kanavu
பார்வை : 186

மேலே