காத்திருப்பு

ஆலிபேரலையாய் ஆயிரம்
எண்ணங்கள் எனக்குள்- அதை
வெளியிட முடியாத அபலையாய் நான்

வரமறுக்கும் வார்த்தைகள்
ஊமை என்றால் சைகை பாசையிலாவது விடுதலை அளிக்கலாம்
என் எண்ணங்களுக்கு

நீ கேட்க மறுத்ததால் எண்ணங்களும்
உறைந்து உறைந்து பாறையாகி விட்டன

இந்த பாறையை சிலை வடிக்கும்
சிற்பியை ஈசன் இன்னும்
படைக்க வில்லை போலும்
உன் நினைவில் இருந்து மீண்டு வாழ்கையை வாழத்தான் நினைக்கிறேன்

ஒவ்வொரு முறையும் வாழ்வின் விளிம்பு வரை வந்து வந்து சறுக்கி விழும் சாமர்த்தியம் சாகடிக்கும்போது -உன் நினைவு
என்னை பார்த்து ஏளனமாய் பரிகாசம் செய்கிறது

வெந்து வெந்து எழும்பும் உடலாய்
என் காலம்- இறுதிவரை
உணர்வற்ற உடலாய்
மந்தமான மனதுடன் மறத்து
மரணிதுத்தான் போய் விட்டது

என்னை விட்டு அகல்வதில்லை
என்பதில் கங்கணம் கட்டிக்கொண்டு
பாறையை விட
உறுதியாய் இருக்கிறது உன் நினைவு .

என் நினைவு உனக்குள் நிராகரிக்கப்பட்ட காலாவதி என தெரிந்தும்
சாத்திரங்களை சட்டை செய்யாமல்
காத்திரமாய் காத்திருக்கிறேன் மௌனத்துடன்

உன்னோடு சங்கமிக்கவல்ல
உன் நினைவுகளின்
ஐக்கியத்துடன் என் நாட்களை கடந்துவிட

எழுதியவர் : Ragavi (30-Sep-12, 7:11 pm)
Tanglish : kaathiruppu
பார்வை : 143

மேலே