புத்தகம்
![](https://eluthu.com/images/loading.gif)
வெள்ளை காகிதத்தில்
எழுத்தின் விளையாட்டு
அருவியாய் கொட்டியதில்
அறிவின் ஊற்று
ஞானமாய் சுரந்தது
அவன் திறக்கபட்டால்
கண்களும் திறக்கப்படும் .
விரல் தேடும் வரிகளின்
உண்மை இது !
எட்டி பார்த்த கனவுகளுக்கு
எட்ட இருந்து கோட்டை
கட்டியவன் !
புதியவன் கையில்
கிடைக்க
எச்சில் வைத்து
திருப்பிய பக்கம் எல்லாம்
வரிகள் வைரங்களாய்
பதிக்கபட்டிருந்தது !
காற்றுக்கு கூட
என்ன ஆர்வம்!
பக்கங்களை சட சடவென
திருப்புகின்றது !
மையிட்ட அவன்
பக்கத்தில்
எத்தனை கண் பட்டது !
மையிட்டதே கண் பட தானோ ?
இறந்து போன எழுத்தாளன்
கூட உயிர் வாழ்கிறான்
எத்தனை வீட்டின்
புத்தக அறையில் !
இன்றும் அவன் எத்தனை
உள்ளங்களில்
வார்த்தையால் பேசுகிறான் !
இது தான் ஆவிகளோடு
பேசுவதோ ?
இன்று புத்தகம்
சுமக்க சுமை தாங்கியாய் இருந்தால்
நாளை வெற்றி
உன்னை சுகமாய்
சுமக்கும் !