ஒரு காந்தியமாய்....

அஹிம்சை என்ற ஒன்றை மூச்சாய் கொண்டு,
ஆசை என்பதை அறவே துறந்து,
இந்தியாவை உன் நெஞ்சில்,
ஈன்றவளாய் நினைத்துக் கொண்டாய்!
உதிரத்தை சிந்தியவரின் உருவப்படம்
ஊரெங்கும் திரிகிறது ரூபாய் நோட்டுகளில்!
என்றும் இளமை கொஞ்சும் இளமைக் கிழவன் நீ!
ஏந்தவில்லை ஓரு ஆயுதம்தான் உன் கையில் நீ!
ஐம்பொன்னை விரும்பாது உன் தேகம்!
ஒரு கதர் ஆடைமட்டும் உடுத்தினாய் இது தியாகம்!
ஓடிக்கொண்டே இருந்தாய் உன் மூச்சு இருக்கும்வரை,
ஔடதம் என்னும் சுதந்திரத்தை வாங்கும் வரை,
ஆயுத எழுத்தாய் நின்றாய் அனைவரின் நெஞ்சில்,
ஒரு காந்தியமாய்....

மதிவாணன் பிறந்த நாளில்
மதுக்கடைகள் விடுமுறையாம்!
இது உனக்கு தெரிந்திருந்தால்
பிறந்திருப்பாய் வருடத்தின் ஒவ்வொரு நாளும்
இந்த மதுவிலக்கு சுதந்திரத்தையும்
பெற்று தருவதற்காக...

அரையாடை உடுத்திக்கொண்டாய்
தாய்நாடு சுதந்திரம் பெற,
அரைகுறை ஆடை உடுத்துகிறார்
உம் காந்தியமே தேய்வுபெற...

காந்தியத்தை பற்றி பேசி கைத்தட்டல் வாங்கியவன்
கையில் கட்டுக்கட்டாய் கள்ளநோட்டுக்கள்!
கடவுளே! நியாத்தை நிலைநாட்டியவரின்
நிழல் படத்தை அச்சடித்தே...

நினைவிற்கு வருகிறாய்
விடுமுறை நாட்களில் மட்டும்!
இருந்தும் பேசப்படுகிறது என்
நினைவெல்லாம் இவர்தான் என்று
அவரவர் புகழுக்காக....

காந்தியம் என்பதை அறிந்திருந்தால்
நிகழ்ந்திடுமா இங்கு இனப்படுகொலைகள்!
காந்தியை நினைத்திருந்தால் தான்
மறைந்திடுமா மக்கள்ஆட்சி நீதியும்!

வெள்ளையனே வெளியேறு என்று
நீ சொன்னாய் வெற்றி திலகமிட்டு!
இன்று வெள்ளையனுக்காக வெளியேறுகிறார்கள்
தன் தாய்நாட்டை மறந்துவிட்டு!

ஒத்துழையாமை இயக்கத்தை
ஒளிவீச செய்தாய்! இன்று ஒருவருக்கொருவர்
அடித்துக்கொண்டிருக்கிறான் இவன்
சாதி பெரியதென்று..

கத்தியின்றி இரத்தமின்றி பாடுபட்டவரே
இன்று உன் கைத்தடிக்கு வேலையில்லை
காந்தியத்தை மறந்து வாழும்
இந்த மக்கள் இடத்தில்..

கைத்துப்பாக்கி இருந்தால் கொண்டுவா
சுட்டுவிடுவார்கள் காந்தியத்தை பற்றி
பேசுபவர்களையே...
நல்லவர்களை சுடுவதொன்றும்
இவர்களுக்கு புதிதில்லை
இது மாறாது நாட்டில் சில
நரிக்கூட்டம் உள்ளவரை

காந்தியத்தை மறந்துவாழும்
மடையர்களை நினைத்து
கண்ணீர் வடிக்காதே உன் கல்லறையில்
அது இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது
சுதந்திர தியாகம் முழுமையாய் தீராமல்
உன் நினைவில் வாழும் மானிடர்களிடத்தில்

தியாக மூச்சுக் காற்றில்
உருவான காந்தியம் கலந்துவிட்டது
காற்றில்....

அதை நீ சுவாசி ஆனால்
மாசு படுத்திவிடாதே...
உன் நன்மைக்காத்தான்....

எழுதியவர் : கோல்டன் Prabhuraj (8-Oct-12, 9:40 pm)
சேர்த்தது : பிரபுராஜ்
பார்வை : 132

மேலே