பொட்டு வைத்தது யார்?
வானமே - நீ
கடற்கரை ஓரத்தில்
கரிசல் மண்ணோடு
புரண்டு எழுந்தாயோ !
வானமே - உன்
ஆடை கிழிசல்களை
அவிழ்த்துவிடு - நான் தைத்து
அனுப்புகிறேன்.
வானமே !
உனக்கு பொன்னாடை
போர்த்தியது எங்கள்
அரசியல் நட்சத்திரங்களோ !
வானமே - ஏன் ?
மாலையில் மட்டும் - நீ
மஞ்சள் பூசி
பொட்டு வைத்துக்கொள்ளுகிறாய் !
காலையில்
உன் அழகை கண்டால்
கதிரவன் சுட்டுவிடுவான்
என்பதாலா ?
Dr.ம.பாரதிநாதன்...