வானவில்

வானவில்லே,
மழைக் காலத்தில் மட்டும்
வெளியே வருகிறாயே
காரணம் ?

பொறாமையால்
சூரியன் - உன்னை
சுட்டுவிவான்
என்பதாலா...

வானவில்லே,
பகலில் மட்டும் தோன்றுகிறாயே
காரணம் ?

நிலவானவன் - உன்
வண்ணங்களை
திருடிடுவான்
என்பதாலா...

வானவில்லே - உன்
வண்ணங்கள் யாவும்
மங்களாய்ப் போயிற்றே
காரணம்?

சேலைக்கு
வண்ணம் பூச்ச
உன்மேல் ஒத்தி ஒத்தியே
எடுத்துவிட்டார்கள்
என்பதாலா...

வானவில்லே,
எப்போதும் வளைந்தே
தென்படுகிறாயே
காரணம்?

மாசு படிந்த - இந்த
உலக உருண்டையை
உனது வண்ணத்தை
ஊற்றி கழுவுவதற்காக
தூக்கிச் செல்ல
வளைந்து கொடுக்கிறாயா
கைப்பிடியாக...

MG.சில்வர்ஸ்டார்...

எழுதியவர் : MG.சில்வர்ஸ்டார்... (10-Oct-12, 11:00 pm)
பார்வை : 3974

மேலே