சொல்லுங்கள் மேகங்களே ..

பசுமை படர்ந்த கனவுகளுடன்
வேலை தேடி அலைந்தேன் ;
லச்சங்களை காணுவதற்காக
லகிரி கொண்ட மனம் படைத்தேன்;
உச்சங்களை மகன் தொடட்டுமென்று..
மிச்சமிருந்த வீட்டை விற்று
பணம் தந்த பெற்றோரின்
பாதம் தொட்டு வணங்கிவிட்டு
ஏஜென்டின் கைப் பிடித்து
எரோப்லேன் ஏறி வந்தேன்..
பாலைவனத்தில்..
பசி நிறைந்த வைத்துடன்
ஒட்டகம் மேய்க்கின்றேன்
உண்மையில் நானிங்கு..
ஓடும் மேகங்களே !
ஒரு சொல் கேட்பிரோ?
ஊருக்கு போயி
சேக்காளி பசங்ககிட்ட
சீக்கிரமாய் சொல்லிடுங்க...
அக்கரை பச்சைன்னு
ஆசைபட்டு..
சொத்து சுகங்களை வித்துபுட்டு..
இங்கே வரவேண்டாம்..
இன்னலும் படவேண்டாம்..
உள்ளூரில் இருந்து கொண்டே
ஊர்மெச்ச வாழ்ந்திடலாம்..

எழுதியவர் : ந. ஜெயபாலன், திருநெல்வேலி -6 (11-Oct-12, 3:57 pm)
சேர்த்தது : na.jeyabalan
பார்வை : 193

மேலே