அன்பே கடவுள்
தெருவெங்கும்
கோவில் கட்டி
தெய்வங்களுக்குள்
...பிரிவினை கண்டோம்
முதல் மரியாதை
யாருக்கு என்று
தலைமுறைக்கும்
பகை வளர்த்தோம்
கருவிலே சுமந்தவளை
தெருவிலே நிறுத்திவிட்டு
வரம் தரும் கடவுளை தேடி
வையகம் எங்கும் ஓடுகின்றோம்
அன்பே கடவுள் என
அனைத்து வேதங்களும்
கற்பித்த பின்னரும்
அகராதியை புறட்டுகின்றோம்
அன்பு என்ற வார்த்தைக்கு
அர்த்தங்களை தேடி தேடி