தேடல் இயந்திரங்கள்- கே.எஸ்.கலை
திரிகை
கல்லுரல்
அம்மி
ஆட்டுக்கல்லு
அரிக்கன்
அகப்பை...
இப்படி
எத்தனையோ
தமிழ்
வார்த்தைகளுக்கு
தமிழனுக்கு
அர்த்தம்
சொல்லித் தருகிறது
ஆங்கிலேயனின்
தேடல் இயந்திரங்கள்
இன்று !
நாளை...
அம்மா
அப்பா
பாட்டி
தாத்தா....
_________
தேடல் இயந்திரம் -Search Engines
உதாரணம் - Google/Yahoo