உன்னைத்தேடி

மொழி தெரியா ஒருவனிடம்
எழுதிய கவிதை எப்படி
என்று கேட்டதுபோல்
இரக்கமில்லா உன்னிடம்
என்காதல் சொன்னேன்.
காலம் கெட்டு விடவில்லை
கண்திறந்து பாரம்மா
ஞாலம் நம்மை வாழ்த்தும்
நீயும் வந்து சேரம்மா

நீ நடந்த பாதையெங்கும்
நெறிஞ்சி குத்துமென்று
யாருமிலா நேரத்திலே
நேர்த்தியாய் துடைத்த கதை
நான் சொல்லவோ

காலடித் தடங்களை
காமிராவில் படம்பிடித்து
பூமிக்கு வந்த பொன்னிலாச்
சுவடென்று போவோரிடம்
சொன்னது நானல்லவோ

எல்லோரும் ராமநாமம்
எழுதிப் போகும்போது
நான் மட்டும் உன்பேரை
அழகழகா எழுதி
அடிவாங்கியதைச் சொல்லவோ

பாடையில் போனாலும்
உன் பெயரோடு போகவேண்டும்
வாடையில் வாடினாலும்
உன்நினைவோடு வாட வேண்டும் .

நாடிழந்து வீடிழந்து
நரம்புகள் தானிழந்து
நாடித்துடிப்பும் நானிழந்து
போனாலும் வாடிபோவேனோ
உன்வதனமதை மறப்பேனோ.

எழுதியவர் : சுசீந்திரன். (15-Oct-12, 7:18 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
பார்வை : 155

மேலே