விழித்துக் கொண்ட உறக்கங்கள்...!
வா வா கண்ணா
வானத்தில் விளையாடலாம்!
உலகத்தின் மகிழ்ச்சியனைத்தையும்
உள்ளத்தில் வைத்திருப்பவனே!
கோபியரை கொஞ்சுபவனே
கோகுலத்தில் இருக்கும் எந்தன் உறவே!
காற்றோடு கலந்திருப்பவனே
காதலோடு என் சுவாசத்தில் நிறைந்திருப்பவனே!
தனித்துவத்தை தனக்குள் வைத்திருப்பவனே
தவித்த என் மனதை தணித்தவனே!
மோகத்தை மேகமாக வைத்திருப்பவனே
மோகனப் புன்னகையால் தர்மத்தை வென்றவனே!
கற்சிலை அல்ல நீ
கனிந்த உன் மனதில் என்னை எழுதியவன் நீ....!