தெய்வம் தந்த தெய்வம்
பத்து வயது பிள்ளை
கணினியோடு உறவுகொண்டு
வலைதளத்தில்
தேடி நின்றது
முதியோர் இல்லம்
விடை அறிய
வினா நான் தொடுக்க
நேற்று தேடி
இன்று விட்டு வந்தீர்கள்
பாட்டி தாத்தாவை
நான் பெரியவனானதும்
உங்களை சேர்க்க
இடம் வேண்டுமே
ஆதலால் தேடுகிறேன்
முதியோர் இல்லம்
என்ற போது
பேச்சும் மூச்சும் நின்றது
கண்ணீர் ஆறு வழிந்தோட
ஓடி சென்று
அழைத்து வந்தேன்
என்னை பெற்ற தெய்வங்களை
எங்கள் சந்ததி வாழ்ந்திட