அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்

அக்கினிச் சிறகினை கற்றேன் - அதை
அனுதினமும் மனதினிலே பதிந்திடவே வைத்தேன்
வெல்லத் துணிந்தது மனது...!
தன்னம்பிக்கை கொள்ளின் தாழ்வதும் வீழ்வதும் உண்டோ ?
முத்தை திரு பத்தித் திருநகை அத்திக்கிட.....!

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு...!
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும்
உண்டோ ?
தத்தரிகிட தத்தரிகிட தத்தோம்........!

கடவுளைக் கண்டதும்
பயபக்தி வந்தது - மேன்மையுரு திரு
கலாமை கண்டதும்
தேசபக்தி வந்தது......!

அக்கினிக் குஞ்சுகள் அது பாரதி பாட்டிலே
அச்சுறுத்தி வேக வைத்தது அன்னியர் தலைகளை
அக்கினி ஏவுகணை அ. பெ. ஜே. அ உழைப்பிலே
அறிவு இந்தியாவை உயரவைத்தது உலகிலே ..!

அச்சம் தவிர்த்தோம் நாங்கள்
அன்பான உமது கட்டளைப் படி - இனி
அயறோம் இந்தியாவை வல்லரசாக்காது .....!

பாரதியை படத்தில் பார்த்தோம் - உம்மை எங்கள்
பக்கத்தில் பார்க்கின்றோம்........!

இந்தியாவின் உண்மையான முதல் குடிமகனே
இனிய தமிழ்நாட்டுத் தலை மகனே..........

இனி எங்களை வழி நடத்துங்கள் ஐயா - இனி ஒரு
இளைஞன் இந்த பாரதத்துக்கு வேண்டும்....!

எழுதியவர் : (18-Oct-12, 11:16 pm)
பார்வை : 1648

மேலே