தேடினேன் தேடினேன்

ஈழம் செந்தமிழ் தேவியின் சிறப்பு
பெற்ற தனி பூமி.....

இயற்க்கை எழில் கொஞ்சிவிளையாடும்
சொர்க்க பூமி நம் ஈழபூமி
பச்சை பசேலென்று வயல்வெளிகள் வந்தாரை
வரவேற்க்க காத்திருக்கின்றன.....

விலங்குகள் மற்றும் பறவைகளும் ஏன்!
எமக்கும் கலையாத கனவாய் இருந்த சொர்க்கபூமி.....

அன்னை பத்து மாதங்கள் சுமந்து எம்மை
பெற்றெடுக்க எங்களோடு கொஞ்சி விளையாடக்
காத்திருந்தது எம் ஈழபூமி.....

தொன்று தொட்டு பழமையிலிருந்தே பண்பாட்டில்
சிறந்து விளங்கியவன் தமிழன்
இதுதான் எங்களின் குற்றமா ???

நாம் தமிழன் அல்லவா வந்தாரை வரவேற்றோம்
.

இழந்தோம் இழந்தோம் தாயை இழந்தோம்
தந்தையை இழந்தோம் ....
அன்பு அண்ணன் தம்பியை இழந்தோம்
பாசமான அக்க தங்கையை இழந்தோம் ....

இழந்தோம் இழந்தோம் குடிஉரிமை இழந்தோம்
இழந்தோம் இழந்தோம் பிறப்புரிமை இழந்தோம்
இழந்தோம் இழந்தோம் கல்வி உரிமையும் இழந்தோம் .....

காந்தியின் அகிம்சா வழியில் சென்றோம்
பயனில்லை ,,,,
இறையாகிய அக்கா தங்கையின் கதரல்கூட
மறையவில்லையே .......
அனால் மறைந்து போனது எம் தமிழினம்......

கடற்கரை மணலிலே நாம் பதித்த பாதச்சுவடுகளை
அடித்துச்செல்வது போல....
------ அலைகளால் எம்
தமிழினமே இருந்த சுவடுகள்கூட இல்லாமல்
போய்விட்டதே .....

மனிதா உனக்கு எங்கு போனது உன்
மனிதாபிமானம் ????
காக்கை கூட ஒன்று சேருமாம் தன்னினம்
காக்க ...........ஏன்
ஐந்தறிவு படைத்த உயிரினமே அதன்
உயிர்களை மதிக்கும்போது ஏன்
நீ மட்டும் வேடிக்கை பார்த்தாய் ????

நாம் தமிழர்கள் என்ற காரணத்தாலா???
ஏன் தமிழனாய் பிறந்தது எம் குற்றமா ???
வந்தவர்களை வரவேற்பது தான் எம் குற்றமா???

கண் இமைகள்கூட துரும்புகள்
எதிர்நோக்கும்போது முடிக்கொல்லுமமாம்
தம்மை பாதுகாக்க .....ஏன்
நாம் மட்டும் எம்மை பாதுகாத்துக் கொள்ளக்கூடாதா??? இது எம் குற்றமா???

தேடினேன் தேடினேன் எம் உறவுகளின்
கல்லறைச் சுவடுகள்கூட எமக்கு கிடைக்கவில்லையே.......

கற்பனை செய் காலம் வருமென்று அறின்ஞர்
அப்துல்கலாம் சொன்னார் அன்று அதனால்
இன்று வரை கற்பனை காண்கிறேன் ஈழம்
எம்வசப்படும் என்றெண்ணி .........

தேடினேன் தேடினேன் விடியலைத்தேடி வாழ்வின் வசந்தகாலம் வருமென்று.........

எழுதியவர் : சின்னத்துரை பார்த்தீபன் (18-Oct-12, 11:41 pm)
பார்வை : 194

மேலே