மனிதனோ உயர்திணை?

மனக் கோளாரே மமதையுமே
முதிர்ந்தோர் தவிர்க்கும் போதையதே
தினமும் வாழும் வாழ்கையிலே
தெளிவாய் விளங்கும் கதைஇதுவே

உண்ணும் உணவில் ஊர்உழைப்பு
உடுத்தும் உடையிலும் பிறர்துடிப்பு
பண்ணும் காரியம் யாவிலுமே
பாரா முகங்கள் பங்கெடுக்கும்

பலபேர் செய்யும் கட்டடம்போல்
பாரில் வாழும் வாழ்க்கையுமே
நிலத்தின் உரிமை இருந்தாலும்
நடத்தித் தந்தவர் பலரன்றோ

செடியும் கொடியும் அஹிம்சைவாதிகள்
கொடியன பிறர்க்கு இழைப்பதுமில்லை
மனதால் வாக்கால் உடலால்நிதமும்
தீங்கிழைக்கும் மனிதனோ உயர்திணை?

ஆங்கோர் ஏழை பசித்திருந்தான்
அடுத்தவன் நோயினில் முடிந்திருந்தான்
பாங்காய் தீர்வு காணாமல்
ஆணவம் வந்தால் அறிவீனம்

எழுதியவர் : புதுயுகன் (19-Oct-12, 4:20 pm)
பார்வை : 163

மேலே