உதிரும் மொட்டுக்கள் !!!

போக்குவரத்து சமிக்ஜை தான் எங்கள் பணியிடம் இது சமுகம் எங்களுக்கு கொடுத்த தனியிடம் !!

சிகப்பிற்கும், பச்சைக்கும் இடையில் எங்கள் வேலை இதை நம்பி மட்டுமே எங்களின் நாளை !!

பசிக்கும், வதைக்கும் இதில் பஞ்சம் இல்லை நாங்கள் மழலைகள் என்ற எண்ணம் சிலருக்கு கொஞ்சமும் இல்லை !!

சூரிய விளக்கின் வெப்பத்தில் தினம் கருகி, பூக்கும் முன்னரே உதிரும் மொட்டுக்கள் நாங்கள் !!

வாகனம் உமிழும் நச்சு புகையில் சிக்கி விடியல் தேடி தவிக்கிறது எங்களின் பிஞ்சி கனவுகள் !!

கல்வி தரும் நூல் அதை சுகமாக சுமக்க ஆசைப்பட்டு சுமையென சுமக்கும் சுமை தாங்கிகள் நாங்கள் !!

நிழல் தேடும் எங்களை வெயிலில் நிறுத்தி எங்களின் நிழலில் இளைபாருகின்றனர் சில கொடூரர்கள் !!

போக்குவரத்து சமிக்ஜையில் புத்தகம் விற்கும் மழலைகள் நாங்கள் - வாங்க வழியின்றி விற்கிறோம். வாங்க வழிசெய்ய கேட்கிறோம் !!!

எழுதியவர் : (19-Oct-12, 5:56 pm)
பார்வை : 155

மேலே