உழவரின் வலி

உழவா!

உன் மார்பு வலிக்க கலப்பை
பிடித்து உழவு ஓட்டினாய்......
உன் கைவிரல்கள் வலிக்க
களை எடுத்தாய்..........
உன் கால் வலிக்க சேற்றில்
நின்றாய்................
உன் தலை வலிக்க நெல்
பாரம் சுமந்தாய்..........
மொத்தத்தில் உன் உடம்பு
வலிக்க நெல்லை உருவாக்கினாய்
ஒரு கடவுள் போல-------

ஆம்! உறவாக்கும் திறமை
உன்னிடம் உள்ளதல்லவா.......
நீயும் கடவுளே..........

ஆனால்!
உன் மனது வலிக்க அரசு
விலை நிர்ணயம் செய்தது
நீ உருவாக்கிய நெல்மனிக்கு!

சோர்ந்து விடாதே உழவா!
இந்த உலகில் மனிதன்
வாழ உணவு வேண்டும்.....
அதை உன்னால் மட்டுமே
உருவாக்க முடியும்......

அப்பொழுது இந்த உலகமே
உந்தன் காலடியை நோக்கி
காத்திருக்கும்! (உழவா....)
மன்னிக்கவும் கடவுளே..............

எழுதியவர் : முகவை கார்த்திக் (23-Oct-12, 4:13 pm)
பார்வை : 160

மேலே