இறைவன் பழகிய கவிதை

இறைவா அது ஒன்றும்
இலகு அல்ல கவி படைப்பது....! - நான்
இளிப்பது கண்டு
இதயம் வருந்தாதே....!
குரங்கிலிருந்து கரு எடுத்தே நீ
குறுக்கு வழியில் ஒரு கவி படைத்தாய்....
குரங்கின் தோற்றம் உன்னால்
மனிதக் கவிதையாய் மலர்ந்தது....
குரங்குப் புத்தி மட்டும் - இன்னும்
குறையாமல் இருக்குது......

இப்படிக்கு -
அழகாய் சிரித்தபடி - உன் அன்பு
அலங்காநல்லூர் காளை ஒன்று

எழுதியவர் : (25-Oct-12, 1:39 am)
பார்வை : 186

மேலே