அன்புள்ள கணவனுக்கு...

வாளோடு உறை கட்டி இருப்பதுபோல்- உன்
காலோடு என் உடல் கட்டி கிடந்திடுவேன்.

முதலிலே காலையில் நான் விழித்திடுவேன்
மூடிய உன் விழிகள் ரசித்திடுவேன்.

அவசரமாய் என் அலுவல்கள் முடித்துவிட்டு
அறைகுறையாய் un துயிலைகலைத்திடுவேன்

பாலோடு பட்சணமும்
உன்னோடு பகிர்ந்திடுவேன்.

நூலோடு மலர்போலே
உன்னை நீங்காது ஒட்டிடுவேன்.

அலுவலகம் நீ செல்ல ஆயத்தம்.
அதனாலே என் மனதில் போர்யுத்தம்.

காலை மாலை
கணக்கெல்லாம் எனக்கில்லை.

மூவேளையும் உன்னோடு
கதைத்திருந்தும் திருப்தி இல்லை.

எண்ணிற்கு எல்லை
இறுதிஎன்று ஏதும் இல்லை.

உன் மீது நான் கொண்ட
ஆசைக்கு அளவில்லை.

உன்னை பிட்டு பிட்டு தின்றிடவா? - இல்லை
சாற்றாய் பிழுந்து குடித்திடவா?

இப்படிக்கு
அன்பு மனைவி.

எழுதியவர் : hujja (25-Oct-12, 12:09 pm)
சேர்த்தது : hujja (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 1044

மேலே