கண் இழந்த அரசு....
அப்பாவின்
காலி மது பாட்டில்களில்
மண்ணெண்ணெய் ஊற்றி
விளக்கேற்ற முயற்சிப்பாள்..
அப்பாவோ இருளை நோக்கி.......
-------------------------------------------------------------------
சீரழியும் குடும்பத்திற்கு
வாய்க்கரிசியாய்
வந்து விழும்
அரசு தரும் அரிசி.
--------------------------------------------------------------------
கடைகளில் கட்டாயம்
எழுதப் பட்டிருக்கும்
மது நாட்டிற்கும் வீட்டிற்கும்
கேடு என்று
கண் இழந்த அரசு......