வானப் பூக்கள் !
ஒத்த வடிவில்
உருண்டு விழும்
வானப் பூக்கள் !
வானிலிருந்து
வழுக்கி விழுந்த
மேகக் கன்றுகளே !
மேகங்களில்
பவனி வந்து,
மோதல்களில்
பிறந்து விழும்
ஆடையற்ற அழகே !
அழகால் பார்ப்போர்
கண்ணுருஞ்சும்
நிறமில்லா அட்டையே !
ஓடிவந்து விழுவதும்
விழுந்தபின் ஓடுவதும் - பின்
கரைந்து காற்றாகி
எழுந்து பறப்பதுமென
காலத்தோடு கலந்து ஓடும்
காலக் குட்டிகளே !
வராமல் அலைக்கழிப்பதும்
வந்து அழிப்பதும் - நீ
வாடகைக்கு வாங்கிய வாடிக்கை !
நிரந்தரம் நல்ல நிறமே !
நீயின்றி நாங்களில்லை,
நீர்த்தாயின் நிழல் பிள்ளையே !
உன் குளுமையின் கடுமையால்
உறையத் தொடங்கும்
என் குருதிக் குழம்பை
ஓடவைக்கவே - உனைமறந்து
எழுதுகோல் துறந்து
கண்ணை படுக்கப் பணிக்கிறேன் !