பணவெறி

பணம் ஒரு பறவை
என்பதை
காட்ட தானோ
கடவுள் இந்த
பறவையை
படைத்தானோ
ஆம் !!
பறவை !!
அது
பறக்க ஒரு எரிபொருள்
தேவை இல்லையே
அது
தன் இஷ்டம் போல
எங்கு வேண்டும் என்றாலும் பறந்து செல்லும் !!
அது
உண்டு எறிந்த விதை
நம் முன்னே ஒரு மரமாக
காட்சியளிக்க வில்லையா !!
உயர பறக்க பறக்க
அந்த பறவைக்கு தெரியும்
த்ன்
தலைக்கு மேல் உள்ள
இயற்கையின் படைப்பான சூரியன்
தன்
ஆற்றலை குறைத்து
கொண்டு இருக்கிறது என்று !!
மனித என் இந்த பணவெறி
குணம் இல்லாது திரிகிறாய் !!
பிறர் குடி கெடுக்க துடிக்கிறாய் !!
பூட்டை கள்ள சாவி கொண்டு திறக்கிறாய் !!
வெறி நாயை போல அலைகிறாய் !!
சில நேரம் உனது நண்பர்களையும் கடிக்கிறாய் !!
விலைமாதர் போல செல்கிறாய் !!
விலை கொடுத்து மது குடிக்கிறாய் !!
அது
உன் உயிர் குடிக்கும்
என அறிந்தும் கூட
அதனுடன் கட்டி தழுவுகிறாய் !!
சிலர் குடி கெடுத்து
வரும் பணம் உன் குடும்பத்தை அளிக்கும்
என்பதை மறக்கிறாய் !!
ஆறடி
சொந்தம் இல்ல
இந்த உலகத்தில்
நீ நுறு அடி வாங்க துடிப்பது ஏனோ !!