தசை நரம்புகளில் தமிழ் ரத்தம் பாயட்டும்

தசை நரம்பினில்
தமிழ் ரத்தம் கொண்டால்

திசை எங்கிலும்
தமிழ் மொழி வெல்லும்

விசை காற்றினில்
வீரத் தமிழ் தூவினால்

இசை ஒலிகளில்
இன் தமிழ் ஜொலிக்கும்

தமிழ் மகள் சிரிக்கவே
தரணியை வெல்லலாம்

தமிழ் மகள் வாழவே
தன்னுயிர் பேணலாம்

வீழ்வது நாமாய் இருந்தாலும் தோழனே
வாழ்வது நமது தமிழென இருக்கட்டும்

எழுதியவர் : (4-Nov-12, 8:22 pm)
பார்வை : 185

மேலே