உங்களின் ஒரு சொல்.
உங்களிடம் ஒரு சொல்
இருந்தது.
உங்களின்....என் மீதான
கோபம்....
அன்பு....
ஏக்கம்....
எல்லாம் தாங்கி
உங்களின் உதடுகளில்....
தள்ளாட்டத்துடனும்....துள்ளாட்டத்துடனும்...
ஆடிக் கொண்டிருந்தது அது.
இரவுகளில்...
நீங்கள் உறங்குகையில்
உங்களின்
கனவுகளின் பல்லக்குகளில்
அமர்ந்து...தன்னை அலங்கரித்தபடி
வலம் வந்து தன்னை இரசித்தது அது.
பகலின் ...
வெளிரும் வெயிலில்...
தனக்கு முன்னே விரையும்
உங்களின் வாழ்க்கைக்கு அஞ்சிய படி...
வறண்டு உலர்ந்து ஒளிந்து கொண்டது
உங்கள் நாக்கின் இடுக்குகளில்.
என் தூக்கம் தொலைத்து....
உங்களை....
அடுக்கி....அடுக்கி....
தன்னை அடையாளம் காட்டும்
அந்தச் சொல்லை வைத்துத்தான்
உங்களை.....
இந்தக் கவிதையில் பதிகிறேன்.
ஏனோ....
யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல்...
பெரும் துக்கத்தில்
மரணித்துக் கொண்டிருகிறது
உங்களின்....
"ஒரு" சொல்.