என் பாவங்களின் வரலாறு

கசப்பை கோட்டையில் விழுங்கி
வேப்பங்கனியாய் வெளியில் இனித்திருந்தேனே
வெறுப்பை சுண்ணம்பூசி
துவர்ப்பை உடைத்து காற்றில் ஊதித் தள்ளி
வெறும் பச்சை இலையாய் மட்டும் தழைத்திருந்தேனே
கோபக் கனலுக்கு கருப்பு குடைப்பிடித்து
என் வழியில் விழிகளைத் தாழ்த்தி நடந்தேனே...
தவறு செய்வதில் கோழையின் வீரம் கொண்டேனே...
பாவங்கள் நுழையா ஒரு நெருப்பு புற்றாய் தானே வீற்றிருந்தேன்...

இருந்தேன்...இருந்தேன்...
அப்படி தான் இருந்தேன்
அதற்கென்ன?

இனி
என் கசப்புகளை எல்லாம்
வேம்பின் பாலில் வெளியேற்றுவேன்
என் வெறுப்புகளை எல்லாம்
வெற்றிலைச்சாற்றில் வாய் நார வெளியில் துப்புவேன்
என் கோபங்களை எல்லாம்
கொளுத்தும் விழிகளில் கண்டவரிடமெல்லாம் கொப்பளிப்பேன்
என் தவறுகளை எல்லாம்
ஊர் தம்பட்டங்களில் ஒலியாக்குவேன்
என் பாவங்களை எல்லாம்
பருக வரும் பாம்புகளுக்கு பாலாக்குவேன்

ஹா ஹா ஹா

இப்பொழுதுதான்
இன்புறுகிறேன் நான் கெட்டவனென்று...

எழுதியவர் : இத்ரீஸ் (8-Nov-12, 11:47 am)
பார்வை : 98

மேலே