இரவின் ரகசியம்
எப்பொழுதும் தன்னுள்
எதுவோ எதையோ நிரப்பிக் கொண்டிருப்பதையோ
அல்லது
நிரப்பப்பட்டதை எல்லாம்
மறுபடியும் திறந்து
எடுத்துப் பார்த்துக் கொண்டிருப்பதையோ உணர்ந்தாலும்
எதிர் சொல் ஒன்றும் எழாமல்
எதிர்படுவதை எல்லாம் ஏற்றுக் கொள்கிறது
இரவின் உண்டியல்
சரி அதில் அப்படி என்னதான் இடப் பட்டது
என்று உற்றுப் பார்த்தால்
எதிர்பட்டதெல்லாம் வெறும் இருட்டுதான்
உண்மையில் உள்ளே கிடப்பது
வெறும் இருட்டு மட்டும்தானா என்று
ஒரு முறை வெளிச்சமடித்து பார்க்க
அதில் பளிச்செனக் விழித்துக் கிடந்தது பகல்.