ஆற்றைக் கடக்காத அழுக்கு மூட்டைகள்
போற்றக்கூடியவையை நாம்
புதருக்குள் மறைப்பதில்லை
நச்சு எண்ணங்களையும்
நாற்றமானதையும்
'சுய' நாகரீகம் கருதி
நாமாக உரைப்பதில்லை
ஏனென்றால்
அழுக்கு மூட்டைகள் தாமாக
ஆற்றைக் கடப்பதில்லை
இதிலென்ன அதிசயம்
தன் இருட்டுத் திருட்டுத் தளங்களை
எந்த திருடன்தான் விரும்பவில்லை?