கண்தானம் செய்திடுவோம் !

இதயத்தில் கொஞ்சம்
ஈரம்
வைத்திருப்பவர்களே ,
இல்லாதவர்களுக்கு
கொஞ்சம்
ஈயப் பாருங்கள் !

வெளிச்சமில்லா இருட்டில்
இரண்டடி நடப்பதற்குள்
இமாலயம்
சென்று விட்டப்படி
இடுங்கிப் போய்
இருப்பவர்களே ,
கொஞ்சம்
ஆறுதல் நிழல் '
தந்துவிட்டுப் போங்கள்!

அதை செய்து விட்டேன்
இதைசெய்து விட்டேன்
என
பெருமைப் பட்டுக்கொள்பவர்களே,
கண்ணில்லாத எங்களுக்கு
கலங்கரை விளக்காய்
வாழ்ந்துவிட்டுப் போங்கள் !

என்னசெய்வது ?
இறைவன் இரண்டு கண்களைப்
படைப்பதற்குள்
அவசரப்பட்டு பூமியில்
பயணித்த இவர்களுக்கு ?
ஒன்று செய்திடுவோம்
கண்தானம் செய்திடுவோம் !

இறக்கவே பிறந்தோம்
பிறக்கவே இறந்தோம்
இருக்கும் போது
முடியாது எனினும்
இறக்கும் போதாவது
தானம்செய்வோம் !
இறந்து கிடக்கும் அவர்களின்
வாழ்விற்கு
ஒளியேற்றி உட்கார வைப்போம் !

நம்மை சுமந்து செல்ல
நான்கு பேரை சேமிப்பதில்லை
வாழ்க்கை !
நம்மை நினைத்துக்கொள்ள
இரண்டு பேரை
ஈட்டுவது தான் வாழ்க்கை!
கண்தானம் செய்திடுவோம் !

கண்தானம் செய்திடுவோம்
கண்தானம் செய்திடுவோம்
என நான்
அறைகூவல் விடுவ தெல்லாம்
அல்லும் பகலும்
கலங்கிய மனது
அமைதி பெறுவதற்கான
ஓர் அஸ்திவாரம் தான் !
சில பிஞ்சு குழந்தைகள்
இனியாவதுகொஞ்சி விளையாடிடும்
என்ற
நம்பிக்கையில் தான் !

மனிதர்களே !மகத்தான உலகத்தின்
மணி மகுடுடங்களே!
இருப்பதை கொடுப்பதற்கு
இவ்வளவு யோசனை
எதற்கு ?
இறந்த பிறகு
நம் கண்கள்
பயன்படட்டும் சில
மனிதர்களின் வாழ்விற்கு !

வாருங்கள் மக்களே !
இனியவாவது
முக்கியமான தொரு
முடிவெடுப்போம் !
ஒன்றுக் கூடி உயில் எழுதுவோம் !
"இறந்த பிறகு
என் கண்கள் இல்லாத இதயத்திற்கு " என்று !

மாலையில்
விழும் சூரியனால்தான்
காலையில் பிரகாசிக்க
முடியும் !

"உதிரும் இலைகளே !
உரமாகுங்கள்
நாளைய
மரங்களாவது செழிக்கட்டும் !"

எழுதியவர் : yathvika (10-Nov-12, 8:07 am)
பார்வை : 322

மேலே