மா"ரணம்" !

ஆரம்பம் உண்டென்றால்
முடிவு நிச்சயிக்கபட்டதே,
எனும் இயற்கை நியதிகளை
உடைத்து உள்ளேருகிறது காதல் !
உயிர் உயரே போகும்போதுதான்
காதல் காற்றோடு கலக்கிறது !

கணமான வலிகளும்
காணாமல் போகும் !
உங்கள்
காதலிகளில் கண்களில்
காதலை பருகிவிட்டு
திரும்பிப் பாருங்கள்
வலி வந்த தடம்
வறண்டு போயிருக்கும் !

வலிகளால் வளைக்கப்பட்டு
வாய்விட்டு துடிக்கும்போதும்,
ஆணென்று மறந்து
கண்களில் கண்ணீர்
ஊற்றெடுக்கும் போதும்
அவள் விழிகளே நிவாரணி !

மறைந்து போகுமோ
மரித்துப் போகுமோ
தெரியவே தெரியாது,
அவள் விழிபட்ட வினாடிகளில்
வலிகள் வந்த வழிகள் !

மரணங்களில் இருந்து
கைப்பற்றி காப்பாற்றிய
அவளால் தான்
ரணமேயெனில்
மரணம் கால்முளைத்து
மா"ரணம்" ஆகிறது !

எழுதியவர் : வினோதன் (12-Nov-12, 12:55 pm)
பார்வை : 206

மேலே