காதல் தோல்வி - கே.எஸ்.கலை

அத்த பெத்த பெரிய மச்சான்
ஆசா பாசம் நெறைய வச்சான் !
வார்த்தையால வசியம் வச்சி
வயசு புள்ள மனச தச்சான் !

கொஞ்சி கொஞ்சி பேசி அவன்
நெஞ்சி முழுக்க நெறஞ்சிப்புட்டான் !
கொஞ்சம் நேரம் பேசல்லன்னா - நெஞ்சில
நெருஞ்சி குத்தும் துன்பம் வச்சான் !

காதலுன்னு வேஷம் போட்டு
கண்ணு தண்ணி சிந்த வச்சான் !
மனசொடச்சி அழுக வச்சான்
மனச தச்ச சொந்த மச்சான் !

படிச்ச தொழில் வேணுமின்னு
பட்டணத்துப் பக்கம் போனான் !
புடிச்ச புள்ளய துடிக்கவச்சி
படிச்ச புள்ளய கட்டிக் கிட்டான் !

கொஞ்சி கொஞ்சி பேசி என்ன
இஞ்சி இஞ்சா தின்னுபுட்டு
நஞ்சி போல வார்த்த சொல்லி
நெஞ்சொடச்சி போயுபுட்டான் !

மனசுக்குள்ள கோட்டக் கட்டி
வயசுப்புள்ள வளத்த ஆச
மனசுக்குள்ள அடக்கம் பண்ணி
மாசக் கணக்கு ஆகிப் போச்சி !

கண்ட கனவு பலிக்கவில்ல
தின்ன சோறு செமிக்கிதில்ல !
கடலப் போல பெருத்த ஆச
ஒடலக் கொளுத்தி திங்குதிங்க !

படிச்சதெல்லாம் மறந்து போச்சி
புடிச்சதெல்லாம் வெறுத்து போச்சி !
பொஸ்தகத்துல தூங்குன நான்
மெத்தயிலயும் முழிச்சிருக்கேன் !

தவிக்கிறப்போ அவன எண்ணி
தலகாணி நனைக்கும் தண்ணி
செஞ்ச பாவம் என்னமோன்னு- நா
நெஞ்சடைச்சி துடிக்கும் கன்னி !!

கருப்பு பொட்டு வச்சிக்கிட்டு
கலகலப்பா பறந்த சிட்டு
செவத்த பொட்டு கனவு கெட்டு
வாழுரனே துடிச்சிக்கிட்டு !

வெத வெதமா ஆசப் பட்டு-இப்ப
வாழுறே நா அவஸ்த்த பட்டு !
வெவஸ்தக் கெட்ட காதலால
போகுது ஏ வாழ்க்க பட்டு !
------------------------------------------------------------
(இந்த தலைப்பினை வழங்கிய தோழி புலமி அம்பிகாவிற்கு மிக்க நன்றி)

எழுதியவர் : கே.எஸ்.கலை (13-Nov-12, 10:52 am)
பார்வை : 596

சிறந்த கவிதைகள்

மேலே