ஞானியின் கூற்று (சிறுகதை )

ஒரு ஞானியிடம் ஒருவர் கேட்டார்.
தாங்கள் யாரிடம் பாடம் கற்றீர் என்று ...
அதற்கு ஞானி..
நான் பலரிடம்
பல்வேறு பாடம் கற்றேன். அவர்கள் எல்லோரைப் பற்றியும், சொல்வதற்குக் கால நேரம் போதாது.குறிப்பாக ஒன்றை கூறுகிறேன் .
" ஒரு நாள் இருள் சூழும் நேரம், ஒரு குழந்தை மெழுகுவர்த்தி ஒன்றை எரிய வைத்தது. அந்தக் குழந்தையிடம் ஒளி எங்கிருந்து வந்தது?" என்று கேட்டேன் . அந்த குழந்தை மெழுகுவர்த்தியை ஊதி அணைத்து விட்டு "ஒளி எங்கே சென்றது ? என்று கேட்டது.
அன்றே என் ஆணவம் அழிந்து விட்டது.
அன்றிலிருந்து கர்வம் அற்ற வாழ்வைத் தொடங்கினேன் என்றார் அந்த ஞானி .

இந்தக் கதை என்னை நெகிழச் செய்தது .

அன்புடன் ...செயா ரெத்தினம்

எழுதியவர் : செயா ரெத்தினம் (14-Nov-12, 4:01 pm)
பார்வை : 471

மேலே