பல நாள் திருடன் ஒரு நாள் கையில் (சிறுகதை )
பல திருட்டுகளில் பிடிபடாமல் இருந்த ஒரு திருடன் ஒரு பெரிய திருட்டில் அகப் பட்டு நீதிமன்றத்தில் பல வருட சிறைத் தண்டனைக்கு உட்பட்டு சிறையில் இருந்தான். அவனைப் பார்ப்பதற்கு அவனது தாயார் வாராவாரம் சிறைக்கு வருவதும், தாயாரைப் பார்க்க விருப்பமில்லை., திருப்பி அனுப்புங்கள் என்று அவன் சிறைக் காவலரிடம் சொல்வதும் வழக்கமாகி விட்டது. இப்படி பல மாதங்கள் ஓடியது. ஒரு முறை சிறைக் காவலரே அந்தத் தாயின் மீது இரக்கப் பட்டு,எனக்காகவதுஒரு முறை தாயை சந்திக்க வேண்டும் என்று திருடனை அறையிலிருந்து அழைத்து வந்தார்.
திருடன் கம்பிக்கு உட்புறமும்,தாய் கம்பிக்கு வெளிப்புறமும் இருந்தனர். திருடன் தாயிடம், நான் சிறையில் இருக்கக் காரணமே நீதான் என்றான். நான் சிறுவனாக இருக்கும் போது அறியாத வயதில் பள்ளியிலிருந்து பென்சில்,ரப்பர்,பேனா போன்ற பொருட்களை திருடி வந்தேன். இது தவறு என்று என்னைத் திருத்தவில்லை. என்னை ஊக்கப் படுத்தினாய்.ஆக நான் திருடனாக மாறுவதற்கு நீதான் காரணமாக இருந்தாய். நீ என்னைப் பார்க்க வரவேண்டாம் என்று கூறி உள்ளே சென்று விட்டான்.இக் கதை மூலம் ...
தத்துவ ஞானி சாக்ரடிஸ் கூறுவது...
நீங்கள் நல்லவராக இருப்பதோடு மட்டும் அல்லாமல் மற்றவர்கள் நல்லவர்களாக இருப்பதற்கும் காரணமாக இருங்கள் .என்றார் .
இந்தக் கதை நமக்கு உணர்த்துகிறது.